கிருஷ்ணகிரி மாவட்டம் டெங்கு தடுப்பு, தூய்மை பணிகளில் முதன்மையாக உள்ளது
தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம் டெங்கு தடுப்பு, தூய்மை பணிகளில் முதன்மையாக உள்ளது என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவு, விபத்து சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கதிரவன், நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பருவநிலை காரணமாக ஏடிஸ் கொசுவானது அதிக அளவில் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் காலை 6 மணி முதல் டெங்கு குறித்து கள ஆய்வு பணிகள் மேற்கொண்டு சுகாதார தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது டெங்கு காய்ச்சல் தாக்கம் குறைந்துள்ளது.
மாநிலம் முழுவதும் 17,500 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது காய்ச்சல் தாக்கம் 11 ஆயிரமாக குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 52 பேர் பலியாகி உள்ளனர். தமிழக அரசு முழு வீச்சில் காய்ச்சல் தடுப்பு பணிகளை செய்து வரும் நிலையில் பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் காய்ச்சலை முழுவதுமாக குறைக்க முடியும்.
தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு, தூய்மை பணிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து திரையுலக பிரபலங்கள் மூலம் குறும்படங்கள் வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, இணைந்து நோய்தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.5 கோடி மதிப்பில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் ரூ.25 கோடி மதிப்பில் சுகாதார பணி மற்றும் மருத்துவ மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்காக கூடுதலாக 200 படுக்கை வசதிகளுடன் கூடிய கட்டிட பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story