தஞ்சையில் 29-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்
தஞ்சையில் 29-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று, அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஒரத்தநாடு,
ஒரத்தநாடு தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒரத்தநாடு வடக்கு, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர்கள் நடேசன், கருப்பையன் ஆகியோர் தலைமை தாங்கினர். கு.பரசுராமன் எம்.பி., ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால் வரவேற்றார். ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
கூட்டத்தில் வருகிற 29-ந்தேதி(புதன்கிழமை) தஞ்சையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சி.வி.சேகர் எம்.எல்.ஏ., தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.திருஞானம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதாரவிச்சந்திரன், ஒரத்தநாடு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ச.கோவிந்தராஜ், நிலவளவங்கி தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒரத்தநாடு நகர செயலாளர் த.செல்வம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story