மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மைதுறை முதன்மை செயலாளர் பார்வையிட்டார்
கீழையூர் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மைதுறை முதன்மை செயலாளர் பார்வையிட்டார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் கீழையூர், ஒன்றியத்தில் வடகிழக்கு பருவமழையினால் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தமிழக அரசின் வேளாண்மைதுறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கீழையூர் ஒன்றியம் காரப்பிடாகை ஊராட்சி யில் மழை நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டனர். பின்னர் சடையன்கோட்டகம் - வேதாரண்யம் கால்வாய் அருகில் மழைநீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களையும் பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:- தற்போது கீழையூர் ஒன்றியம் காரப்பிடாகை, காரப்பிடாகை தெற்கு, சடையன்கோட்டகம் உள்ளிட்ட பகுதியில் மழைநீரில் மூழ்கி உள்ள பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர் சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அதைதொடர்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி கூறும்போது, விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்க, பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், நாகை மாவட்டத்தில் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் பயிர்க்காப்்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் செயல்படும் பொது சேவை மையங்களிலும், மேலும் தனியாக செயல்படும் பொது சேவை மையங்களிலும் துரிதமாக பயிர் காப்பீடு பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர்(பொறுப்பு) மயில்வாகனம், துணை இயக்குனர்கள் நாராயணசாமி, விஜயகுமார், உதவி இயக்குனர் சந்திரஹாசன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story