ஓமலூர் அருகே தடுப்பணையில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆய்வு
தடுப்பணையில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று ஆய்வு செய்தார். தடுப்பணை கட்டியதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டிபுதூர் பெரியகாடம்பட்டி பகுதியில் சரபங்கா ஆற்றின் குறுக்கே ரூ.1.20 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக எழுந்த புகாரின்பேரில் நேற்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அங்கு வந்து தடுப்பணை கட்டப்பட்ட இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முத்துநாயக்கன்பட்டிபுதூர் பெரியகாடம்பட்டி பகுதியில் சரபங்கா ஆற்றின் குறுக்கே ரூ.1.20 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இதில் இரண்டு அடி மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. தடுப்பணை கட்டியதில் முறைகேடு செய்துள்ளனர். இதனை கட்டிய ஒப்பந்ததாரர், ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கண்ணையன், கார்த்திக், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் முருகன், பா.ம.க. நிர்வாகிகள் அண்ணாமலை, செந்தில் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இதன்பின்னர் மேச்சேரி ஒன்றிய அலுவலகத்தில் தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சதாசிவம், மேட்டூர் தாசில்தார் செந்தில்குமார், மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 250-க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

Related Tags :
Next Story