குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 19 Nov 2017 5:24 AM IST (Updated: 19 Nov 2017 5:23 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வேலூர்,

வேலூர் சைதாப்பேட்டை சாதிமக்கா தெருவில் சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை திடீரென மெயின் பஜாரில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

எங்கள் பகுதிக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர், சீராக வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து பல நாட்களாக மாநகராட்சி ஊழியர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதியை சுற்றியுள்ளவர்களுக்கு தண்ணீர் சீராக வினியோகிக்கப்படுகிறது. எங்கள் பகுதிக்கு மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். மாணவ– மாணவிகள், குழந்தைகள், பெரியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எங்கள் பகுதியில் குப்பையையும் அள்ளப்படுவதில்லை. சீராக தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story