100-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


100-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 20 Nov 2017 4:30 AM IST (Updated: 20 Nov 2017 3:18 AM IST)
t-max-icont-min-icon

இந்திராகாந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

புதுச்சேரி,

இந்திராகாந்தியின் 100-வது பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி 100 அடி ரோட்டில் உள்ள இந்திராகாந்தியின் உருவச்சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான், தனவேலு, எம்.என்.ஆர்.பாலன், விஜயவேணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் இந்திராகாந்தியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், கட்சி நிர்வாகிகள் வினாயகமூர்த்தி, தேவதாஸ், நீல.கங்காதரன், பெத்தபெருமாள், ஏழுமலை, கருணாநிதி, இளையராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் சார்பில் பெரிய காலாப்பட்டில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்டு இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ஜோசப், வட்டார தலைவர் கணேசன், கட்சி நிர்வாகிகள் வக்கீல் ராமலிங்கம், சக்திவேல், ஆடியபாதம், முகுந்தன், சரவணன், தன சேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Related Tags :
Next Story