அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய புதுவை பெண் கைது
ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திச்சென்ற புதுவையை சேர்ந்த பெண்ணை, அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா, கூடுவாஞ்சேரியை அடுத்த அரசூர் கிராமம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதனகோபால். இவருடைய மனைவி செல்வி(வயது 20). 10 நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக செல்வியை சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 14-ந்தேதி செல்விக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் 9-வது வார்டில் தாயும், சேயும் இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் செல்வி தனது குழந்தையுடன் தனியாக இருந்தார். அவர் தனது குழந்தையை பார்த்துக்கொள்ளும்படி பக்கத்து படுக்கையில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு கழிப்பறைக்கு சென்றார். அந்த நேரத்தில் பர்தா அணிந்துவந்த ஒரு பெண் திடீரென செல்வியின் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடினார்.
இதைப்பார்த்த சிலர் கூச்சலிட்டனர். கழிவறைக்கு சென்றுவந்த செல்வி தனது குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து கதறி அழுதார். அப்போது மருத்துவமனையில் இருந்த தனியார் பாதுகாவலர்கள் யோகராஜ், ராணி ஆகியோர் குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணை மடக்கிப்பிடித்தனர். அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணுக்கு தர்மஅடி கொடுத்தனர்.
இதையடுத்து மருத்துவமனை அதிகாரி அனிதா அளித்த புகாரின் பேரில், மருத்துவமனை பெண் போலீஸ் விஜயராணி, சுதா ஆகியோர் கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு ராயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் உதவி கமிஷனர் ரகுராம், இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து விசாரணை நடத்தினர்.
பின்னர், குழந்தையை செல்வியிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட பெண்ணை ராயபுரம் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர். அதில் அவர் புதுச்சேரியை சேர்ந்த ரம்ஜான்பேகம்(36) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையை கடத்திக்கொடுத்தால் ரூ.10 ஆயிரம் தருவதாக கூறியதன் பேரில் கடத்த வந்தேன். இதற்காக என்னுடன் வந்த ரெஜினாபேகம் மருத்துவமனைக்குள் சென்று தனியாக இருக்கும் குழந்தையை நோட்டமிட்டு என்னிடம் தகவல் தெரிவித்தார். நான் உள்ளே சென்று அந்த குழந்தையை கடத்திவந்தேன்” என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் அளித்த தகவலின்பேரில் ரெஜினா பேகத்தை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பின்னால் மிகப்பெரிய குழந்தை கடத்தல் கும்பல் இருப்பதாகவும், அவர்கள் பணம் கொடுத்து பெண்கள் மூலம் பச்சிளம் குழந்தைகளை கடத்திவருவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Tags :
Next Story