கடலூரில் கழிப்பறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


கடலூரில் கழிப்பறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:00 AM IST (Updated: 20 Nov 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கழிப்பறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார்.

கடலூர்,

உலக கழிப்பறை தினத்தையொட்டி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கழிப்பறையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி லாரியில் தனிநபர் கழிப்பறை ஒன்று வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் தனி நபர் கழிப்பறையின் அவசியம் குறித்தும், திறந்த வெளி கழிப்பறையினால் ஏற்படும் பாதிப்புகள், தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து இருந்தனர்.

பேரணி

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி குண்டுசாலை பஸ் நிறுத்தம் அருகே முடிவடைந்தது. இதில் மாவட்ட சமூக அலுவலர் இந்திரா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, நபார்டு உதவி பொதுமேலாளர் சங்கர், அரசு மருத்துவர் டாக்டர் பரிமேலழகர், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, ரியல் சமூகசேவை நிறுவன இயக்குனர் லாரன்ஸ், சேவ் த சில்ரன் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோக்கிம் ஜேக்கப் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story