விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:15 AM IST (Updated: 20 Nov 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு

செம்பட்டு,

திருச்சி விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2-வது நாளாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிலம் கையகப்படுத்துவதை கைவிடவில்லையென்றால் கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக பொதுமக்கள் கூறினர்.

திருச்சி விமானநிலைய விரிவாக்க பணிக்காக, அப்பகுதியில் பாரதி நகர், பாரதி நகர் விஸ்தரிப்பு ஆகிய பகுதிகளில் வீடுகள் உள்ள நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்து, கடந்த வாரம் அதிகாரிகள் வந்து அந்த இடத்தை அளந்து, அனைவருக்கும் நோட்டீசு வினியோகம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வந்து விமான நிலைய நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் விமானநிலைய விரிவாக்க பணிக்காக நிலத்தை கையகப்படுத்தக்கூடாது என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதி நகர், பாரதி நகர் விஸ்தரிப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி வயர்லெஸ் ரோட்டில் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூறுகையில், “விமானநிலைய விரிவாக்க பணிக்காக நாங்கள் குடியிருக்கும் நிலத்தை கையகப்படுத்தும் முடிவினை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டமாக, அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவற்றை விரைவில் கலெக்டர் அலுவலகத்திலோ அல்லது தாசில்தார் அலுவலகத்திலோ ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்துவோம்” என்றனர். 

Next Story