தகவல்களை பதிவு செய்வதற்காக ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி மோசடி
தகவல்களை பதிவு செய்வதற்காக ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஒரு கும்பல் மோசடி செய்வதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை,
கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் சிலர் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மீது, வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளின் தகவல்களை பதிவு செய்வதற்காக ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது.
வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டு, டெபிட் கார்டின் ரகசிய குறியீட்டு எண், 16 இலக்க எண் உள்ளிட்ட விவரங்களை ரகசியமாக கண்டறிய சிறிய ரககேமரா மற்றும் ஸ்கிம்மர் கருவியுடன், செல்போனும் இணைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் சாய்பாபா காலனி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணை
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கேமராவுடன் இணைந்த ஸ்கிம்மர் கருவி மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். இதை யடுத்து ஸ்கிம்மர் கருவியில் எவ்வளவு ஏ.டி.எம். கார்டுகளின் விவரங்கள் பதிவாகியுள்ளது என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஸ்கிம்மர் கருவியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பணம் சுருட்டப்பட்டு உள்ளதா? வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்., பணம் இருப்பு தகவல்கள் முடக்கப்பட்டு உள்ளதா? என வங்கி நிர்வாகிகள் உதவியுடன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பணம் எடுத்து மோசடி
ஏ.டி.எம்.எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி, அதில் பதிவாகும் தகவல்களை வைத்து, போலியான ஏ.டி.எம். கார்டு தயாரிக்கிறார்கள். பின்னர் அந்த போலி ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தபடியே பணத்தை எடுத்து மோசடி செய்ய முடியும். அது போல் ஆன்லைன் வர்த்தக முறையில் பொருட்களை வாங்கவும் முடியும்.
எனவே ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும்போது பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். அந்த வகையில் ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டு பயன்படுத்தும் இடம், மற்றும் அதற்கு அருகே உள்ள இடங்களில் ஸ்கிம்மர் கருவி, மைக்ரோ கேமரா போன்றவை உள்ளதா? என வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். தகவல்களை திருடும் இதுபோன்ற கருவிகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் பணம் எடுக்க வேண்டும். இந்த கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தால் அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் தகவல் கொடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story