கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்துக்கு செல்போனில் மிரட்டல் போலீஸ் விசாரணை
‘பத்மாவதி’ படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தனக்கு செல்போனில் மிரட்டல் அழைப்புகள் வருவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
மும்பை,
‘பத்மாவதி’ படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தனக்கு செல்போனில் மிரட்டல் அழைப்புகள் வருவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் போலீசில் புகார் அளித்து உள்ளார். புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பையை சேர்ந்த கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இந்தநிலையில், ‘பத்மாவதி’ படத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளதை கண்டித்து அவரது செல்போனுக்கு மர்ம ஆசாமிகளிடம் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன. மேலும் பலர் அவருக்கு ஆபாச குறுந்தகவல்களும் அனுப்பி உள்ளனர்.தனக்கு தொடர்ச்சியாக மிரட்டல் அழைப்புகள் மற்றும் ஆபாச குறுந்தகவல்கள் வருவது குறித்து நடிகை ராக்கி சாவந்த் கோரேகாவ் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.
Related Tags :
Next Story