காற்று மாசுவை குறைக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும்


காற்று மாசுவை குறைக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:23 AM IST (Updated: 20 Nov 2017 4:22 AM IST)
t-max-icont-min-icon

காற்று மாசுவை குறைக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து மந்திரியிடம் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே வலியுறுத்தினார்.

மும்பை,

நாடுமுழுவதும் வாகனங் கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே தனது வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மாநில போக்குவரத்துத்துறை மந்திரி திவாகர் ராவ்தேவை சந்தித்து பேசினேன். அப்போது காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் மின்சார வாகனங்களை நடைமுறைக்கு கொண்டு வரும் கொள்கையை வகுக்குமாறு கேட்டுக்கொண்டேன். குறிப்பாக பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன சேவைகளில் இந்த முறையை கொண்டுவருமாறு வலியுறுத்தினேன்.

நகர போக்குவரத்து வாகனங்கள், உணவு மற்றும் சரக்குகளை கொண்டு சேர்க்கும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின்சாரத்தில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். நம் உலகத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் பாதுகாக்கவேண்டியது நமது கடமையாகும். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துத்துறை மந்திரி உறுதி அளித்தார்.

இவ்வாறு ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

Next Story