வங்கியில் 427 சிறப்பு அதிகாரி வேலை
பிரபல வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 427 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்படும் இந்த வங்கியில் தற்போது சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 427 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிரெடிட், ஐடி, செக்யூரிட்டி, பாரக்ஸ், டெரிவேட்டிவ், நிதி, விற்பனை, செக்யூரிட்டி உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடு கிறது. 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. வயது வரம்பு 8-12-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் படுகிறது.
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ், எக்கனாமிக்ஸ், எம்.பி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்புகள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் போன்ற என்ஜினீயரிங் பட்டப் படிப்பு படித்தவர் களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குழு கலந்துரையாடல், தனிநபர் நேர் காணல், உளவியல் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ww.bankofbaroda.co.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 8-12-2017-ந் தேதி.

Related Tags :
Next Story