அரியலூரில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி
அரியலூரில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்ட ஸ்டூடண்ட்ஸ் ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில், மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டியை பள்ளி முதல்வர் டோமினிக் சேவியோ தொடங்கி வைத்தார். போட்டி 6 வயது முதல் 8 வயது வரையும், 8, 10, 12, 14 மற்றும் 17 ஆகிய வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு என குழு போட்டி, தனி நபர் போட்டி தனித் தனியே நடைபெற்றது.
போட்டி அட்ஜஸ்ட்டபிள் குவாட் இன்லைன் முறையில் நடைபெற்றது. போட்டியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். போட்டி நடுவராக மாநில நடுவர் ரவிச்சந்திரன் பணியாற்றினார். போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட ஸ்டூடண்ட்ஸ் ஒலிம்பிக் அசோசியேசன் பொறுப்பாளர் விஜயகுமார், கரூர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், பெரம்பலூர் மாவட்ட பயிற்சியாளர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 நபர்கள் அடுத்த மாதம் மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.

Related Tags :
Next Story