கூட்டுறவு வார விழாவில் 2,174 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


கூட்டுறவு வார விழாவில் 2,174 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:01 PM IST (Updated: 20 Nov 2017 4:01 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வார விழாவில் 2,174 பேருக்கு ரூ.7 கோடியே 86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

சிவகாசி,

சிவகாசியில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 34 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற 27 பேருக்கு பரிசுகளையும் வழங்கினார்.

மேலும் 660 பேருக்கு ரூ.1 கோடியே 63 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான சிறு வணிகக்கடன்களையும், சுய உதவி குழுவில் 781 பேருக்கு ரூ.1 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான சுயதொழில் கடன்களையும், 92 பேருக்கு ரூ.81 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான பணி புரியும் மகளிர் கடன்களையும், 209 பேருக்கு ரூ.1 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான மகளிர் தொழில் முனைவோர் கடன்களையும், 18 பேருக்கு ரூ.8 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான மாற்றுத்திறனாளி கடன்களையும், 31 பேருக்கு ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சம்பளக்கடன்களையும், 22 பேருக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான முத்ரா கடன்களையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக 341 பேருக்கு ரூ.1 கோடியே 85 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் மத்திய கால கடன்களையும், 3 பேருக்கு ரூ.5 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான சிறுபான்மையினருக்கான கடன்களையும், 16 பேருக்கு ரூ.45 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான வீட்டு அடமானக் கடன்களையும், ஒருவருக்கு சுயதொழில் கடனாக ரூ.15 லட்சத்தையும் வழங்கினார். அவர் மொத்தம் 2,174 பேருக்கு ரூ.7 கோடியே 86 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

Next Story