போதை அடிமைகள் மறுவாழ்வு மைய நோயாளி மீது தாக்குதல்? நிறுவனரிடம் போலீஸ் விசாரணை
வில்லிவாக்கத்தில் உள்ள போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? என்பது குறித்து மைய நிறுவனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
சென்னை அண்ணாநகர் டி பிளாக் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் டேனியல்(வயது 39). இவர் குடி மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ‘ஸ்டெப் ஸ்டோன்’ என்ற போதை அடிமைகள் மறுவாழ்வு மையம் ஒன்றை வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலையில் நடத்தி வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த மையத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 100 பேர் வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த மையத்தில் சென்னை திருமங்கலத்தை சேர்ந்த கவுரிசங்கர் என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை அன்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை மையத்திற்கு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தன்னை மையத்தை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறி கவுரிசங்கர் வில்லிவாக்கம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
அதில் அவர் ‘நான் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் தன்னை அடித்து, உதைத்து தாக்கியதாகவும், இதுபோல் உடல்நிலை சரியில்லை என நடித்தால் இன்னும் கடுமையாக தாக்கப்படுவாய் என மிரட்டியதாகவும், மாதம் ரூ.9,500 பெற்றுக்கொண்டு உரிய சிகிச்சையை அளிக்கவில்லை’ எனவும் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மையத்தின் நிறுவனர் ரிச்சர்ட் டேனியலிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story