குரோம்பேட்டையில் பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
குரோம்பேட்டையில் பெண் போலீசின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தாம்பரம்,
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராமராஜ் மீனா (வயது 29). இவருடைய மனைவி அனிதா மீனா. இவர்களுக்கு 3½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
அனிதா தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீசாக வேலை பார்த்து வந்தார்.
இதற்காக அவர் குரோம்பேட்டை ஜட்ஜ் காலனி நடராஜன் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். ராமராஜ் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனிதா நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ராமராஜ் மற்றும் குழந்தை இருந்தனர்.
அனிதா மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் கதவை தட்டினார்.
ராமராஜ் வந்து கதவை திறப்பார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் வரவில்லை. மாறாக குழந்தை வந்து கதவை திறந்தது.
அனிதா தனது குழந்தையிடம் கணவர் குறித்து விசாரித்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.
அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில், ராமராஜ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அனிதா, சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராமராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமராஜ் வேலை இல்லாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story