அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை; மகனுக்கும் வெட்டு விழுந்தது
நம்பியூர் அருகே அரிவாளால் வெட்டி விவசாயி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மகனையும் மர்ம நபர் வெட்டினார். போலீசார் கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நம்பியூர்,
நம்பியூர் அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ருக்மணி (32). இவர்களுக்கு துரைசாமி (10), மோகன்குமார் (4) என்ற 2 மகன்கள். பழனிச்சாமி விவசாய தோட்டத்திலேயே வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். இதில் வீட்டின் திண்ணையில் உள்ள கட்டிலில் பழனிச்சாமியும், மூத்த மகன் துரைசாமியும் படுத்து தூங்கினர். வீட்டின் உள்ளே அவருடைய மனைவி ருக்மணியும் மற்றொரு மகன் மோகன்குமாரும் படுத்து தூங்கினர்.
நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு வந்த அரிவாளால் திண்ணையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பழனிச்சாமியை வெட்டினார். இதில் பழனிச்சாமியின் கழுத்து, மற்றும் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் பிணமானார். அருகில் படுத்திருந்த அவருடைய மகன் துரைசாமி திடுக்கிட்டு எழுந்து சத்தம் போட்டு அலறி கத்தினான். உடனே அந்த நபர், துரைசாமியையும் அரிவாளால் வெட்டினார்.
இதில் நிலைகுலைந்து கட்டிலில் இருந்து கீழே விழுந்த துரைசாமி, கட்டிலின் அடியில் பதுங்கி கொண்டு மீண்டும் சத்தம் போட்டு அலறினான். அவனுடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த ருக்மணி, மோகன்குமார் ஆகியோர் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதற்கிடையே அருகில் உள்ள தோட்டத்தை சேர்ந்தவர்களும் பழனிச்சாமியின் தோட்டத்தை நோக்கி ஓடி வந்தனர். இதை பார்த்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வீட்டை விட்டு வெளியே வந்த ருக்மணி, பதறியடித்து கொண்டு கட்டிலில் படுத்திருந்த பழனிச்சாமியை பார்த்தார். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார். மேலும் மகன் துரைசாமியின் தலையில் வெட்டு காயங்கள் இருந்ததை பார்த்ததும் அவனை மடியில் தூக்கி வைத்து கதறி அழுதார்.
உடனே அங்கிருந்தவர்கள் துரைசாமியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான. அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அறிந்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், வரப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று கொண்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கோவையில் இருந்து தடயவியல் துறை நிபுணர் சங்கீதா சம்பவ இடத்துக்கு வந்து அங்கு இருந்த தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story