திருச்சி மலைக்கோட்டை கோவிலில் 2-ந்தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் அடுத்த மாதம் 2-ந் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 300 மீட்டர் பருத்தி துணியில் தயாரிக்கப்பட்ட திரி கொப்பரையில் வைக்கப்பட்டது.
மலைக்கோட்டை,
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் அவளுடைய தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம் என்பதால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
பிரசித்தி பெற்ற பழமையான இந்த மலைக்கோட்டையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமியும், மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 6 மணி அளவில் உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செப்புக்கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதில் 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியை திரியாக கொண்டு, 900 லிட்டரில் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் செப்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த கார்த்திகை தீப ஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியும்.
இதையொட்டி கடந்த சனிக்கிழமை அமாவாசை என்பதால் அன்று காலை மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே உள்ள கார்த்திகை தீப கோபுரத்தின் முன்பு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. மேலும் கார்த்திகை தீபத்திற்காக திரி தயாரிக்கும் பணிகள் தொடங்கின. அந்த பணிகள் முடிந்ததை தொடர்ந்து நேற்று காலை 300 மீட்டரில் தயாரிக்கப்பட்ட திரியை பல பாகங்களாக கோவில் பணியாளர்கள் மலை உச்சிக்கு எடுத்து சென்றனர். பின்னர் கயிற்றால் கட்டி கோபுரத்தின் உச்சியில் உள்ள கொப்பரையில் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து 900 லிட்டரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகியவை கொஞ்சம், கொஞ்சமாக கொப்பரையில் ஊற்றப்படுகிறது. இந்த எண்ணெயை திரி நன்றாக உறிஞ்சும். இந்த பணிகள் மேலும் சில நாட்கள் நடைபெறும். இதைத்தொடர்ந்து டிசம்பர் 2-ந் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story