குறைதீர்க்கும் கூட்டத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி, கலெக்டரிடம் மாணவர்கள் மனு
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி கலெக்டரிடம் மாணவர்கள் மனு அளித்தனர். இதே போல் வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பெண்களும் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தஞ்சை தெற்கு வீதியில் உள்ள வீரராகவா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2016-17-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் வந்தனர். தற்போது அவர்கள் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு அரசு சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் நாங்கள் படித்த பள்ளியில் சுமார் 32 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை மடிக்கணினி கிடைக்கவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு விலையில்லா மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை ஏ.ஒய்.ஏ. நாடார் ரோட்டை சேர்ந்த பெண்கள் 45-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ரவிச்சந்தர் தலைமையில் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம். எங்கள் அனைவருக்கும் சொந்த இடம் கிடையாது. வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறோம். எங்களால் வாடகை கொடுக்க முடியவில்லை. இதற்கு முன்பு தங்களிடம் மனு அளித்துள்ளோம். எனவே கலெக்டர், இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Related Tags :
Next Story