சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்


சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2017 3:24 PM IST (Updated: 21 Nov 2017 3:24 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நட்டு மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள சேரன்குளம், மூணாம்சேத்தி வழியாக 54.நெம்மேலி நெட்டிக்குளம் வரை செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பெய்த தொடர் மழையால் அந்த சாலை மேலும் சேதமடைந்து சேறும், சகதியாக உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்கக் கோரி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாதர் சங்கத்தினர் சேரன்குளம் ஊராட்சியில் தாழங்காட்டு தெருவில் சேதமடைந்து சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர்கள் ஆர்.இளங்கோவன், எஸ்.மார்க்ஸ், மணி ராஜப்பா, கிராம சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், முருகையன், பக்கிரிசாமி, பாக்யராஜ் மற்றும் மாதர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.



Next Story