மணல் கடத்தலை தடுக்க பாலாற்றில் 10 இடங்களில் ராட்சத பள்ளம் பொதுமக்கள் நடவடிக்கை
வேலூர் அருகே பாலாற்றில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க வாகனங்கள் செல்ல முடியாத வகையில் 10 இடங்களில் பொதுமக்கள் ராட்சத பள்ளம் தோண்டி உள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் ஓடும் பாலாற்றில் மணல்திருட்டு அதிகமாக நடைபெற்று வருகிறது. லாரிகள், டிராக்டர்கள், ஆட்டோக்கள் மற்றும் மாட்டுவண்டிகள் மூலம் மணல் கடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் மணல் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருகிறது.
வேலூரை அடுத்த பெருமுகை, புதுவசூர், அலமேலுமங்காபுரம் பகுதிகளிலும் தொடர்ந்து மணல்திருட்டு நடைபெற்று வருகிறது. மணல் கடத்தலை தடுக்க குழு அமைக்கப்பட்டும் தடுக்க முடியவில்லை. இதனால் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே பொதுமக்களே மணல் கடத்தலை தடுக்க முடிவு செய்தனர். அதன்படி பெருமுகை பகுதியில் பாலாற்றில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் 6 இடங்களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ராட்சத பள்ளம் தோண்டினர். அதேபோன்று அலமேலுமங்காபுரம், புதுவசூர், கசம் உள்பட 4 இடங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் பொதுமக்களே நடவடிக்கை எடுத்து பள்ளம் தோண்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மணல் கடத்தலை தடுக்க நிரந்தரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story