விழுப்புரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று காலை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யாக்கண்ணு வரவேற்றார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தொடக்க உரையாற்றினார். மாநில செயலாளர் பக்கிரிசாமி, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மத்திய அரசு வழங்கியதுபோல் 1.1.16 முதல் 1.10.17 வரை 21 மாத கால நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவப்படி ரூ.ஆயிரம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணசாமி, கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், இணை செயலாளர்கள் உசேன்கான், சிவலிங்கம், ராமச்சந்திரன், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.