அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Nov 2017 4:15 AM IST (Updated: 22 Nov 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மவாட்ட தலைவர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராஜேந்திரசிங், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன், செயலாளர் ரெங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஊதியக்குழு அலுவலர்களின் பரிந்துரைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அதனை உடனடியாக வெளியிடவேண்டும். 1-1-2016 முதல் 30-9-2017 வரை 21 மாதங்களுக்கான ஓய்வூதிய நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும். மத்திய அரசு வழங்கியது போல் தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கவேண்டும், மாதந்தோறும் ரூ.1000 மருத்துவ படி வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story