காதல் தகராறில் கொலையான கல்லூரி மாணவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
கரூர் அருகே காதல் தகராறில் கொலையான கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். கரூர் டவுன் போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
கரூர்,
கரூர் அருகே ஜெகதாபியை அடுத்த குப்பகவுண்டனூரை சேர்ந்த முத்துசாமியின் மகன் கார்த்திக்(வயது 20). இவர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் பி.பி.எம். மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக் நேற்று முன்தினம் காலை மணவாடி ஊராட்சி கத்தாழப்பட்டி அருகே தனியார் சிமெண்டு ஆலைக்கு செல்லக்கூடிய ரெயில்வே தண்டவாள பாதையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில், கார்த்திக்கை அடித்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது தெரிந்தது. கார்த்திக்குடன் அதே கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் மூன்றாமாண்டு படிப்பவரும், கிருஷ்ணாகவுண்டனூரை சேர்ந்தவரும், நண்பரான தர்மராஜ்(19), அவரது அண்ணன் ராமராஜ் (22), துளசிகொடும்பை சேர்ந்த அருண்(19) ஆகிய 3 பேரும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்திக் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலையான கார்த்திக், தர்மராஜ் ஆகிய 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி சென்றபோது பஸ்சில் இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேரும் அந்த இளம்பெண்ணிடம் செல்போனில் பேசி வந்தனர்.
இந்த நிலையில் அந்த இளம்பெண்ணும், தர்மராஜும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவந்தது. இதனால் அவர் தர்மராஜிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார்.
இது குறித்து திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது அண்ணன் ராமராஜிடம் தர்மராஜ் கூறினார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு தர்மராஜ், ராமராஜ், அருண் ஆகிய 3 பேரும் மது குடிக்க கார்த்திக்கை அழைத்து சென்று அங்கு அவரை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க ரெயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றனர். ஆனால் தனியார் சிமெண்டு ஆலைக்கு செல்லக்கூடிய அந்த தண்டவாள பாதையில் சரக்கு ரெயில் எதுவும் வராததால் கார்த்திக் கொலை செய்யப்பட்டு உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.
கைதான 3 பேரும் கார்த்திக் நண்பர்கள் தான். கைதானவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நேற்று நடவடிக்கை எடுத்தனர். கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை கரூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் நடந்தது.
பிரேத பரிசோதனை முடிந்த பின் அவரது உடலை வாங்க மறுத்து கொலையான கார்த்திக்கின் உறவினர்கள், அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், “கைதான 3 பேரையும் எங்களிடம் காண்பிக்க வேண்டும். கொலைக்கு காரணமான அந்த இளம்பெண்ணையும் கைது செய்ய வேண்டும். போலீசார் கூறும் அந்த இளம்பெண் பழனியை சேர்ந்தவர் இல்லை. எங்களது ஊருக்கு அருகில் உள்ள இளம்பெண் தான். அந்த இளம்பெண்ணையும் கைது செய்ய வேண்டும். அப்போது தான் கார்த்திக்கின் உடலை வாங்கி செல்வோம். இல்லையென்றால் வாங்க மாட்டோம்” என்றனர்.
இன்ஸ்பெக்டர்கள் பிருத்விராஜ் (டவுன்), சந்திரசேகர் (பசுபதிபாளையம்), செந்தில்குமார் (வாங்கல்) மற்றும் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடித்து கைது செய்துவிட்டோம். 3 பேரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த இளம்பெண் பழனியை சேர்ந்தவர் தான். உள்ளூர் பெண் அல்ல. காதல் விவகாரம் தொடர்பாக அந்த இளம்பெண்ணிடம் விசாரிக்கப்படும் என போலீசார் கூறினர். இருப்பினும் கொலையான கார்த்திக்கின் உறவினர்கள் சமரசமடையவில்லை. அதன்பின் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் அருகே திரண்டு நின்றனர்.
அங்கு அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை வாங்கி செல்ல அறிவுறுத்தினர். அதன்பின் கார்த்திக்கின் உடலை உறவினர்கள் பெற்று சொந்த ஊர் கொண்டு சென்றனர். கொலையான கார்த்திக்கின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story