அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் மறியல் போராட்டம் 213 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.இதையொட்டி பெண்கள் உள்பட 213 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பை சேர்ந்தவர்கள் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அரசு போக்கு வரத்து கழக நிர்வாகங்கள் பணப்பலன்களை முழுமையாக வழங்கவேண்டும், கோர்ட்டு தீர்ப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பணி ஓய்வுபெற்ற பின்னரும் 139 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்த வேண்டும், மாதத்தின் முதல் நாளே அனைத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கும் ஓய்வூதிய தொகை கிடைக்க செய்யவேண்டும், போக்குவரத்து கழகத்தின் ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்கிட தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
213 பேர் கைது
இதன் ஒரு பகுதியாக திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 213 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இவர்களில் 40 பேர் பெண்கள் ஆவார்கள்.
உணவு வழங்கியதில் பிரச்சினை
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் சிலருக்கு மட்டுமே பகுதி, பகுதியாக மதிய உணவு வழங்கப்பட்டது. அனைவருக்கும் மதிய உணவு வழங்கவேண்டும் என கோரி அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story