எட்டயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 145 விவசாயிகள் கைது
எட்டயபுரத்தில், பயிர் காப்பீடு செய்து விடுபட்ட அனைவருக்கும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட 145 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்,
கடந்த 2015-2016-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்து விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று காலையில் எட்டயபுரம் மேலவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று, பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர். அங்கு அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்ட செயலாளர் நல்லையா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தாலுகா செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (எட்டயபுரம்), சுப்பையா (விளாத்திகுளம்), தாலுகா குழு உறுப்பினர்கள் ராமையா, செல்வம், மாரிச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ரவீந்திரன், மாதர் சங்க மாவட்ட இணை செயலாளர் கஸ்தூரி, ஆட்டோ டிரைவர் சங்கம் ஹரி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதனால் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை தொடர்ந்து, சாலைமறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 145 விவசாயிகளை எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் கைது செய்தனர். இதனால் எட்டயபுரத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story