ரூ.62.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்
குமாரபாளையம் நகராட்சியில் ரூ.62.30 லட்சம் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.
குமாரபாளையம்,
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார சின்னையனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதன்படி குமாரபாளையம் நகராட்சி 4-வது வார்டில் மேல்நிலைப்பள்ளி சாலை பூவரசன் வீதியில் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால், 2-வது வார்டு ராஜராஜன் நகர் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 1-வது வார்டு காவேரி நகர் பகுதியில் ரூ.7.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை, பூசாரிகாடு பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால், மேலும் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி வைத்து குடிநீர், 11-வது வார்டில் தினசரி மார்கெட் பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால், சந்தைபேட்டை பகுதியில் ரூ.3.லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைகிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி வைத்து குடிநீர் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
மேலும் 20-வது வார்டு தெற்கு காலனி பகுதியில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைத்து புதிய மழைநீர் வடிகால், 17-வது வார்டு மாராக்காள் காடு பகுதியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் உட்பட மொத்தம் ரூ.62.30 லட்சம் மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வக்குமார சின்னையன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் குணசேகரன், தாசில்தார் ரகுநாதன், குமாரபாளையம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் நாகராஜன், குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story