திருச்செங்கோட்டில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.பூபதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் விவசாய சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆர்.வேலாயுதம், விவசாய சங்க நிர்வாகி மல்லை, ஒன்றிய செயலாளர்கள் செல்வம், குப்புசாமி, பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினர். இதில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பால் கொள்முதல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே பாலின் தரத்தை அறியும் வகையில் பால் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும் லாக்டோ எனும் பால்மானி, மில்க் ஸ்கேனர், எடை, எந்திரங்கள் மற்றும் இன்டர்நெட் வசதி உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் ஆவின் நிர்வாகம் நிறுவிட வேண்டும்.
பசும்பாலுக்கு ரூ.35-ம், எருமை பாலுக்கு ரூ.45-ம் என பால் கொள்முதல் விலையை உடனடியாக உயர்த்திட வேண்டும். கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் தமிழக அரசு வழங்கிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு பாக்கி இல்லாமல் தொகையை வழங்கிட வேண்டும். போனஸ் மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும். ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை விரிவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story