ரூ.6½ கோடி போதை பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு 12 ஆண்டு ஜெயில்
ரூ.6½ கோடி போதை பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
ரூ.6½ கோடி போதை பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
தன்சானியா பெண்மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2014–ம் ஆண்டு ஜூலை 2–ந் தேதி தன்சானியா நாட்டை சேர்ந்த மெஜினி அப்துல்லா (வயது 37) என்ற பெண் ரூ.6 கோடியே 40 லட்சம் மதிப்பிலான போதை பொருளுடன் பிடிப்பட்டார். போலீசார் மெஜினி அப்துல்லா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் விசாரணை கைதியாக ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
12 ஆண்டு ஜெயில்இவர் மீதான வழக்கின் விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் உள்ள போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் வெளிநாட்டு பெண் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி போதை பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.