சர்க்கரை விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் 137 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சர்க்கரை விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் 137 ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்,
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் ரூ.13.50–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சர்க்கரையின் விலையை ரூ.25 ஆக உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தமிழகம் முழுவதும் நவம்பர் 22–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் நவம்பர் 22–ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தது.
அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கருங்கலில் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், தி.மு.க. கிளை செயலாளர் ஜார்ஜ், முன்னாள் பேரூராட்சி தலைவி எப்சி ராணி, மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குழித்துறை நகர தி.மு.க. சார்பில் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் நகர செயலாளர் பொன். ஆசைத்தம்பி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திங்கள்சந்தை ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜரத்தினம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பாபுராஜ் முன்னிலை வகித்தார். நெய்யூரில் தக்கலை ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரமேஷ்பாபு தலைமையிலும், மேக்கோடு ரேஷன்கடை முன்பு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சித்திரங்கோடு முகிலன்கரையில் உள்ள ரேஷன்கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். இதில் வேர்கிளம்பி பேரூர் செயலாளர் செல்வகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் மவுண்ட் மேரி மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குளச்சல் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் நசீர் தலைமை தாங்கினார். இதுபோல், கொட்டில்பாட்டில் மாவட்ட மீனவரணி துணை செயலாளர் பனிகுருசு தலைமையிலும், துறைமுக ரேஷன்கடை முன்பு ரூபன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தக்கலை அருகே முத்தலக்குறிச்சி ரேஷன்கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வர்க்கீஸ் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று 137 ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 746 பெண்கள் உள்பட 3,434 பேர் மீது அந்தந்த போலீஸ் நிலைய போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story