சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நெல்லையில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நெல்லையில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:30 AM IST (Updated: 23 Nov 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து நெல்லையில் ரே‌ஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலையை உயர்த்தியதை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களுக்கு வழங்கி வந்த மானியத்தை குறைத்த மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் நேற்று தமிழகத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளின் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பகுதி செயலாளர் பூக்கடை அண்ணாத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கதிட்ரல் ஆலயத்தின் அருகில் உள்ள கூட்டுறவு சங்க ரே‌ஷன் கடை முன்பு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை டவுன் பாரதியார் தெருவில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு ஏ.எல்.எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். மேலப்பாளையம் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ரே‌ஷன் கடை முன்பு மத்திய மாவட்ட பொருளாளர் அருண்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமையில் பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் உள்ள ரே‌ஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய அணி செயலாளர் போர்வெல் கணேசன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உஸ்மான்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தச்சநல்லூர் ரே‌ஷன் கடை முன்பு தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story