கந்துவட்டிக்காக எழுதி வாங்கிய வீட்டை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மூதாட்டி மனு
கந்துவட்டிக்காக ஏமாற்றி எழுதி வாங்கிக்கொண்ட வீட்டை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் விவசாயிகள், பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில், ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து புகார் கொடுக்கும் முகாம் நடந்தது.
இதில் ஊட்டியில் ஒரு மனு, குன்னூரில் 6 மனு, கூடலூர் 6 மனு என மொத்தம் 13 மனுக்கள் குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பாக கந்து வட்டி வசூலித்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கூடலூரை சேர்ந்த சகுந்தலா தேவி (வயது 70) மற்றும் அவரது மகள், பேரன்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நான் கூடலூரை சேர்ந்த ஒருவரிடம் கந்து வட்டிக்கு கடந்த 2001-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் வாங்கினேன். என்னிடம் கந்து வட்டி வசூலிப்பதற்காக என்னை ஏமாற்றி வீட்டு பத்திரத்தை, அவரது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டார். பின்னர் வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்று விட்டார். ஆனால், நான் வாங்கிய ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கான வட்டி தொகையும், அசலையும் திருப்பி செலுத்தி விட்டேன்.
இந்த நிலையில் வீட்டை வாங்கிய நபர், தனக்கு சொந்தமான வீடு என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனக்கு சாதகமாக தீர்ப்பு பெற்று விட்டார். இதுகுறித்து புகார் தெரிவித்த என்னையும், எனது குடும்பத்தினரையும் அடியாட்களுடன் வந்து மிரட்டினர். இந்த சம்பவம் குறித்து கூடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அப்போது என்னை மிரட்டக்கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவின்படி செயல்பட வேண்டும் என்றும் வீடு வாங்கிய நபரிடம் போலீசார் எழுதி வாங்கினர்.
இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளேன். எனவே, வீட்டை வாங்கிய நபரை அழைத்து அவரிடம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். மேலும் எனது வீட்டை மீட்டு தருவதுடன், கந்து வட்டி வசூலித்த நபரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சகுந்தலாதேவி மற்றும் அவரது மகளை போலீசார் தனியாக அழைத்து சென்று விவரங்களை கேட்டறிந்தனர். இதுகுறித்து மூதாட்டி சகுந்தலா தேவி கூறும்போது, கந்து வட்டி வசூலிப்பது குறித்து காவல் நிலையத்திலோ அல்லது முக்கிய நபர்களிடமோ புகார் மனு கொடுத்தால், உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் சென்று விடுகிறது. எனவே தான் பத்திரிகையாளர்களுக்கு புகார் மனு கொடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. கந்து வட்டி கேட்டு என்னை ஏமாற்றி எழுதி வாங்கிய வீட்டை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்து உள்ளேன் என்றார்.

Related Tags :
Next Story