தலைமை காவலர் மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது


தலைமை காவலர் மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
x
தினத்தந்தி 23 Nov 2017 4:00 AM IST (Updated: 23 Nov 2017 12:50 AM IST)
t-max-icont-min-icon

தலைமை காவலர் மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

தாமரைக்குளம்,

அரியலூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பரமசிவம். அரியலூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த இவர், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு இவரது மனைவி மைதிலி, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டக்கோவில் கூத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் அண்ணாதுரையை (வயது 40) கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்ற போது அவர் தப்பி சென்றார். இந்நிலையில், அண்ணாதுரை சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அரியலூர் போலீசார் நேற்று முன்தினம் சென்னை சென்று அண்ணாதுரையை கைது செய்து அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story