சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:15 AM IST (Updated: 23 Nov 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாகையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நியாய விலைக்கடைகளில் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று நாகை வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் உள்ள ரேஷன் கடை முன்பு தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். நாகை நகர செயலாளர் போலீஸ் பன்னீர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் காடம்பாடியில் தி.மு.க.வை சேர்ந்த சிவஇளங்கோ, மரியதாஸ் தலைமையிலும், காளியம்மன் கோவில் தெருவில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் அபுபக்கர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாய்மேடு ரேஷன் கடை முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பானியப்பன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி செயலாளர் பரமசிவம், கூட்டுறவு வங்கி இயக்குனர் சண்முகம், கிளை செயலாளர்கள் மகாலிங்கம், மணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தகட்டூரில் ஊராட்சி செயலாளர் வீரமணிகண்டன், பன்னாளில் குமணன், அண்ணாப்பேட்டையில் ரவிச்சந்திரன், தலைஞாயிறு ஒன்றியம் நத்தம்பள்ளம் ரேஷன்கடை முன்பு ஒன்றிய செயலாளர் மகாகுமார் ஆகியோரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதேபோல் வேளாங் கண்ணி ரேஷன்கடை முன்பு பேரூர் கழக செயலாளர் மரியசார்லஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன், மாவட்ட பிரதிநிதிகள் சார்லஸ், மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், புதுப்பள்ளியில் ஒன்றிய அவை தலைவர் மனைதுணைநாதன், திருக்குவளையில் மாவட்ட பிரதிநிதி இல.பழனியப்பன், திருப்பூண்டியில் மாவட்ட பிரதிநிதி முப.ஞானசேகரன், பிரதாபராமபுரத்தில் ஊராட்சி செயலாளர் ராம.கணபதி, மீனம்பநல்லூரில் ஊராட்சி செயலாளர் செபஸ்திராஜ், கருங்கண்ணியில் ஊராட்சி செயலாளர் ரவி, சோழவித்யாபுரத்தில் ஊராட்சி செயலாளர் சக்திவேலவா, மடப்புரத்தில் ஊராட்சி செயலாளர் குணசீலன், சின்னத்தும்பூரில் ஊராட்சி செயலாளர் அருள்செல்வன், திருவாய்மூரில் ஊராட்சி செயலாளர் நமச்சிவாயம், தன்னிலாப்பாடியில் ஊராட்சி செயலாளர் குமார், வடுகச்சேரியில் ஒன்றிய துணை செயலாளர் சீனிவாசன், செம்பியன்மாதேவியில் நாகை தெற்கு மாவட்ட பொருளாளர் திருமலைசாமி ஆகியோரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம் மேலவீதி கூட்டுறவு அங்காடி முன்பு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மீனாட்சிசுந்தரம், என்.வி.காமராஜ் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய, நகர, கிளை பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தமசோழபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். அதேபோல் வாழ்குடி, காரையூர் பகுதிகளில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இளம்சுந்தர், ப.கொந்தகை, திட்டச்சேரி பகுதிகளில் பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன், கட்டுமாவடியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகமதுசுல்தான், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காந்திராஜன், ஒன்றிய பொருளாளர் தமிமுன்அன்சாரி ஆகியோரது தலைமையிலும், திருமருகல், கீழகரையிருப்பு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ரேஷன் கடையில் ஊராட்சி செயலாளர் குமார், சீயாத்தமங்கையில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் ஆகியோரது தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் 38 ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சின்னக்கடைத்தெரு ரேஷன் கடையில் எம்.எல்.ஏ. மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story