விக்கிரவாண்டி அருகே பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது
விக்கிரவாண்டி அருகே பெண் கொலை வழக்கில் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்யுமாறு தொல்லை கொடுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள ஓடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண், லட்சுமிபுரம் ஜம்ஜம் நகரை சேர்ந்த இக்பால் மனைவி மம்முதாபீவி (வயது 41) என்பதும் இவரை யாரோ மர்ம நபர் ஓடை பகுதிக்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்துவிட்டு பின்னர் கழுத்தை நெரித்துக்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்த நகை தொழிலாளியான விக்கி என்கிற விக்னேஷ் (20) என்பவர் அடிக்கடி மம்முதாபீவியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளது தெரிந்தது.
இதன் அடிப்படையில் விக்னேசை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த விக்னேஷ் நேற்று காலை ஒரத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜிடம் சரண் அடைந்தார். உடனே அவரை விக்கிரவாண்டி போலீசில் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் ஒப்படைத்தார்.
இதையடுத்து விக்னேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மம்முதாபீவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து போலீசில் விக்னேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் விழுப்புரத்தில் உள்ள ஒரு நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனது தந்தை தில்லை நடராஜன் கட்டிட வேலை பார்த்து வருகிறார். நான் நகைபட்டறை வேலைக்கு வருவதற்கு முன்பு எனது தந்தையுடன் கட்டிட வேலைக்கு சென்று வருவேன். அவ்வாறு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிபுரத்துக்கு வேலைக்கு செல்லும்போது எனக்கும், மம்முதாபீவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
மம்முதாபீவியின் கணவர் இக்பால் தினமும் காலையில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீட்டிற்கு வருவார். அவரது குழந்தைகளும் வெளியூரில் தங்கி படித்து வந்தனர். இதனால் மம்முதாபீவி வீட்டில் தனியாக இருக்கும்போது நானும் அவரும் நெருக்கமாக பழகி வந்தோம். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பலமுறை நாங்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தோம்.
ஒருநாள் நானும், மம்முதாபீவியும் நெருக்கமாக இருந்ததை இக்பால் நேரில் பார்த்துவிட்டார். உடனே நான் அங்கிருந்து ஓடிவிட்டேன். அதன் பிறகு அவர் மம்முதாபீவியை கண்டித்தார். இதனால் கணவருடன் வாழப்பிடிக்காத மம்முதாபீவி இதுபற்றி என்னிடம் கூறி அழுதார். இந்த நிலையில் மம்முதாபீவி என்னிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு வேறு எங்காவது சென்று விடலாம் என்று கூறி வந்தார். இதற்கு நான் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் என்னை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் தொந்தரவு செய்தார். நாளுக்கு நாள் அவரது தொந்தரவு அதிகமானதால் அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இந்நிலையில் சம்பவத்தன்று மம்முதாபீவி என்னை பார்க்க வேண்டும் என்று செல்போனில் கூறினார். அதற்கு சம்மதித்த நான் அவரை லட்சுமிபுரத்தில் உள்ள ஓடை பகுதிக்கு வருமாறு கூறினேன். நான் கூறியபடி அவர் அங்கு வந்து காத்திருந்தார்.
பின்னர் நாங்கள் இருவரும் அங்கு உல்லாசமாக இருந்தோம். அதன்பிறகு அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், அவரது தலையை பிடித்து தரையில் ஓங்கி அடித்தேன்.
இதனால் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது சேலை முந்தானையால் கழுத்தை நெரித்துக்கொன்றேன். பின்னர் அவரை யாரேனும் அடையாளம் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக முகத்தை சிதைக்கும் வகையில் நான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த ஆசிட்டை எடுத்து அவரது முகத்தில் ஊற்றிவிட்டு அங்கிருந்து ஒன்றும்தெரியாததுபோல் சென்று விட்டேன்.அதன் பிறகு நான் வழக்கம்போல் நகை பட்டறைக்கு வேலைக்கு சென்றேன்.
இந்நிலையில் நான்தான் மம்முதாபீவியை கொலை செய்துள்ளேன் என்பதை போலீசார் கண்டுபிடித்து என்னை தேடி வந்தனர். இதையறிந்த நான், கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரண் அடைந்தேன்.
இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.
பின்னர் விக்னேசை விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story