48 வயது பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கு கைதான 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை


48 வயது பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கு  கைதான 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 22 Nov 2017 9:36 PM GMT (Updated: 22 Nov 2017 9:36 PM GMT)

48 வயது பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் கைதான 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

பெங்களூரு,

48 வயது பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் கைதான 2 வாலிபர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெண் கடத்தி கற்பழிப்பு

பெங்களூரு உளிமாவு அருகே வசித்து வருபவர் 48 வயது பெண். இவர் இரவு நேரத்தில் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த 2 மர்மநபர்கள் அவரை கடத்தி அருகே உள்ள பூங்காவிற்கு கொண்டு சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2016–ம் ஆண்டு மே மாதம் 20–ந் தேதி நடந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பெண்ணை கடத்தி கற்பழித்ததாக சிக்கபொம்மசந்திராவை சேர்ந்த சதீஷ்(வயது 28), அவருடைய நண்பரான ஹூளவள்ளியை சேர்ந்த பார்த்தீபன்(25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலா 27 ஆண்டுகள் சிறை

இதுதொடர்பான வழக்கு பெங்களூரு 53–வது சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட பெண் சரியாக பதில் அளிக்கவில்லை. ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்தபெண் தனது 30 வயது மகனிடம் கூறியிருந்ததால், சம்பவம் குறித்து அவருடைய மகன் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லதா குமாரி தீர்ப்பு கூறினார். அதில், ‘பெண்ணை கடத்தி கற்பழித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் மற்றும் பார்த்தீபன் ஆகிய 2 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், அபராதம் செலுத்தாவிட்டால் கூடுதலாக 2 ஆண்டுகள் அவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் எனவும் கூறி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story