நீடாமங்கலம் அருகே பிணத்தை சுமந்துகொண்டு வயலில் இறங்கி சென்ற உறவினர்கள்


நீடாமங்கலம் அருகே பிணத்தை சுமந்துகொண்டு வயலில் இறங்கி சென்ற உறவினர்கள்
x
தினத்தந்தி 23 Nov 2017 3:00 PM IST (Updated: 23 Nov 2017 1:12 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் பிணத்தை உறவினர்கள் சுமந்து கொண்டு வயலில் இறங்கி சென்றனர்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது புதுத்தேவங்குடி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள குடியானத்தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ளவர்கள் யாரேனும் இறந்தால் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் பிணத்தை சுமந்து கொண்டு வயல்கள் வழியாக செல்லும் நிலை உள்ளது. இதுதொடர்பாக குடியானத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் குடியானத்தெருவை சேர்ந்தவர் திருவாசகம் (வயது 78). தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதியான இவர் உடல்நலம் குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மதியம் நடந்தது. மயானத்துக்கு செல்ல சாலை வசதியில்லாததால் பிணத்தை பாடையில் வைத்து உறவினர்கள் சுமந்து கொண்டு வயலில் இறங்கி சென்றனர். மயானத்திற்கு செல்ல சாலை வசதியில்லாததால் பெரும் அவதிப் படுவதாகவும், உடன் சாலை வசதி செய்த தர வேண்டும் எனவும் புதுத்தேவங்குடி குடியானத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள னர்.

Next Story