மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் சங்கிலி ‘அபேஸ்’ தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி
பழனியில், மின்கட்டணம் செலுத்தச்சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் சங்கிலியை மர்மநபர் ‘அபேஸ்’ செய்தார். தொடரும் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பழனி,
பழனி கவுண்டன்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 70). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி இறந்துவிட்டார். வீட்டில் ராஜம்மாள் மட்டும் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் மின்சார கட்டணம் செலுத்துவதற்காக இட்டேரி ரோட்டில் உள்ள மின்சார அலுவலகத்துக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.
மின்சார அலுவலகம் அருகே அவர் சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், ராஜம்மாளிடம் நைசாக பேச்சுக்கொடுத்தார். அப்போது அவர் தான் மின் கட்டணம் செலுத்த வந்திருப்பதாக கூறினார். இதைக்கேட்ட அந்த நபர், வயதானவர்களுக்கு மின்கட்டணத்தில் சிறப்பு சலுகை தற்போது வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தான் இந்த சலுகை உள்ளது. பெண்கள் அணிந்திருக்கும் நகையில் ஒரு ரகசிய எண் இருக்கும். அந்த எண்ணை மின்சாரத்துறை அதிகாரிகளிடம் காட்டினால் கட்டணத்தில் சலுகை கிடைக் கும் என கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய ராஜம்மாளும் தான் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை அவரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட அந்த நபர் மின்சாரத்துறை அதிகாரி வேறு இடத்தில் உள்ளார். நான் அவரிடம் காட்டிவிட்டு உங்கள் மின்கட்டணத்தில் சலுகை பெற்றுத்தருகிறேன் என கூறினார். மேலும் அவரிடம் இருந்து மின் இணைப்புக்கான பதிவு எண்ணையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால், சந்தேகமடைந்த மூதாட்டி மின்சார அலுவலக ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அது போன்ற சலுகைகள் ஏதும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். அப்போது தான் ராஜம்மாளுக்கு அந்த நபர் நூதன முறையில் தன்னிடம் சங்கிலியை ‘அபேஸ்’ செய்தது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து பழனி நகர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே பழனியில் சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள், பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்துச்செல்வதும், நூதன முறையில் அவர்களிடம் இருந்து நகைகளை ‘அபேஸ்’ செய்யும் சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது. இதனால் நகர மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே பழனியில் நடக்கும் தொடர் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story