பெரும்பான்மை அடிப்படையில் எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது வைத்திலிங்கம் எம்.பி. பேட்டி
பெரும்பான்மை அடிப்படையில் எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. டி.டி.வி.தினகரன் விரக்தியில் பேசுகிறார் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கி அறிவித்தது. இது குறித்து தஞ்சையில் நேற்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி.யிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறி உள்ளாரே?
பதில்:-தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. அதாவது உச்சநீதிமன்றம் என்னசொன்னதோ? அதன் அடிப்படையில் பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார், உ.பி.யை சேர்ந்த அகிலேஷ்யாதவ் இவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் யாருக்கு அதிகமாக இருக் கிறார்களோ? அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் அ.தி.மு.க.வின் உண்மையான இயக்கம் நாங்கள் தான். அதாவது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருக்கின்ற இந்த இயக்கம் தான் என்பதை தேர்தல் கமிஷன் அறிவித்து இரட்டை இலை சின்னத்தை வழங்கி உள்ளது.
விரக்தியில் பேசுகிறார்
கேள்வி:- இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக டி.டி.வி. தினகரன் கூறி உள்ளாரே?
பதில்:- டி.டி.வி. தினகரன் விரக்தியில் பேசுகிறார். ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதாவது ஒரு காரணத்தை கற்பிப்பார். இதோடு அவருடைய பகல் கனவுகள் எல்லாம் பலிக்காமல் போய் விட்டது.
கேள்வி:- டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் உங்கள் அணிக்கு வருவார்களா?
பதில்:- அவர்களிடம் எம்.எல்.ஏ.க்களே கிடையாது. எம்.எல்.ஏ.க்களைத்தான் சபாநாயகர் நீக்கி விட்டாரே?. அவர்களை எம்.எல்.ஏ.க்கள் என்று எப்படி கூறுகிறீர்கள். கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
நடவடிக்கை எடுக்கலாம்
கேள்வி:- தொண்டர்கள் வந்தால் வரவேற்பீர்களா?
பதில்:- அவர்களிடம் தொண்டர்கள் அதிகமாக இல்லை. இருக்கின்ற தொண்டர்கள் வந்தால் நாங்கள் வரவேற்போம்.
கேள்வி:- சசிகலா சொத்து- பணத்தை இங்கிலாந்து, துபாயில் பதுக்கி வைத்துள்ளதாக தீபக் கூறி உள்ளாரே?
பதில்:- தீபக் எந்த அடிப்படையில் சொல்கிறார் என்று தெரியவில்லை. அவர் சொல்வதை பார்த்தால் விசாரணை செய்து அங்கு இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story