பெங்களூருவில் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை மேல்–சபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தகவல்


பெங்களூருவில் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை மேல்–சபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2017 2:21 AM IST (Updated: 24 Nov 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல்–சபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

பெலகாவி,

பெங்களூருவில் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல்–சபையில் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

மெட்ரோ ரெயிலில் 6 பெட்டிகள்

கர்நாடக மேல்–சபையில் நேற்று கேள்வி நேரத்தில் ஆளும் காங்கிரஸ் உறுப்பினர் வீணா அச்சய்யா கேட்ட கேள்விக்கு பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பதிலளிக்கையில் கூறியதாவது:–

பெங்களூருவில் 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. தற்போது மெட்ரோ ரெயிலில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. டிசம்பர் மாதம் முதல் மேலும் 3 பெட்டிகளை இணைக்க திட்டமிட்டுள்ளோம். ஒரு மெட்ரோ ரெயிலில் 6 பெட்டிகள் இருக்கும்.

3 லட்சம் பேர் பயணம்

இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டி ஒதுக்கப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், 4 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதை 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. மெட்ரோ ரெயிலில் தினமும் 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.

மெட்ரோ ரெயில் துறையில் மத்திய–மாநில அரசுகளில் இருந்து 33 அதிகாரிகளும், ஒப்பந்த அடிப்படையில் 761 பணியாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் கன்னடர்கள். பணிகளில் அலட்சியமாக செயல்பட்ட பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.


Next Story