கலெக்டர் அலுவலகம் அருகே நடுரோட்டில் கரும்பு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கலெக்டர் அலுவலகம் அருகே நடுரோட்டில் கரும்பு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-30T02:03:09+05:30)

கலெக்டர் அலுவலகம் அருகே நடுரோட்டில் கரும்பு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் இருந்து நேற்று பகலில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பாலத்தில் வந்த லாரி பாலத்தில் இருந்து இறங்கியதும் திடீர் என்று நடு ரோட்டில் கவிழ்ந்தது.

இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. இதையறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மாற்று ஏற்பாடாக சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் ரோடு வழியாக போக்குவரத்தை திருப்பி விட்டனர். பின்னர் கவிழ்ந்த லாரியை தூக்கி நிறுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. 

Next Story