உள்ளாட்சித்துறை ஊழியர்கள் 6–வது நாளாக போராட்டம்

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் 6–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2017 10:15 PM GMT (Updated: 2017-11-30T02:17:02+05:30)

புதுவையில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தங்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தம் செய்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பத்தில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளதால் அலுவலக பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இதனால் நாள்தோறும் நடைபெறும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. பிறப்பு–இறப்பு சான்றிதழ் பெற முடியாமலும், பதிவு செய்ய முடியாமலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவரம் தெரியாமல் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.

Next Story