நவநிர்மாண் சேனா தொண்டர்கள் 5 பேர் கைது


நவநிர்மாண் சேனா தொண்டர்கள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2017 9:24 PM GMT (Updated: 2017-11-30T02:54:42+05:30)

நவிமும்பை மானேஸ்வரர் ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் நவநிர்மாண் சேனா கட்சியினர் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மும்பை,

நவிமும்பை மானேஸ்வரர் ரெயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் நவநிர்மாண் சேனா கட்சியினர் நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலர் வியாபாரிகளின் பொருட்களை சூறையாடி அவர்களை அடித்து விரட்டினர். இதில் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் 5 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.


Next Story