பாளையங்கோட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழில் நடத்திய பெண் கைது


பாளையங்கோட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து விபசார தொழில் நடத்திய பெண் கைது
x
தினத்தந்தி 1 Dec 2017 2:00 AM IST (Updated: 30 Nov 2017 6:35 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில், வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் தொழில் நடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த 2 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வீட்டில் விபசாரம் நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருமால் ந

நெல்லை,

பாளையங்கோட்டையில், வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் தொழில் நடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த 2 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

வீட்டில் விபசாரம்

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் திருமால் நகரை சேர்ந்தவர் ராம ஜெயபாலாஜி(வயது 38). இவர் அதே பகுதியில் உள்ள ராமச்சந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஸ்ரீகலாவுடன்(வயது 33) குடி வந்தார். இவர்களுடன் இளம்பெண்கள் சிலரும் அங்கு தங்கி இருந்தனர்.

இவர்களது வீட்டிற்கு கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும் ஆண்கள், இளைஞர்கள் அடிக்கடி வந்து சென்றனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு அந்த வீட்டில் ஏதோ நடப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் அந்த வீட்டின் அருகில் சாதாரண உடையில் நின்று அந்த வீட்டையும், வீட்டுக்கு வந்து செல்பவர்களையும் கண்காணித்தனர். போலீசாரின் தீவிர கண்காணிப்பில் அந்த வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

பெண் கைது; கணவருக்கு வலைவீச்சு

இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அப்போது அங்கு இருந்த ராஜபாளையத்தை சேர்ந்த மாரியம்மாள்(23), மதுரையை சேர்ந்த மகேசுவரி என்ற லட்சுமி(28) ஆகிய 2 பெண்களும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களை மீட்டு மதுரையில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராமஜெயபாலாஜி மனைவி ஸ்ரீகலாவை கைது செய்து கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராமஜெயபாலாஜியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story