தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு மேளா நடைபெறும் தேதி, இடங்கள் விவரம்
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு மேளா நடைபெறும் தேதி, இடங்கள் விவரத்தை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் அறிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு மேளா நடைபெறும் தேதி, இடங்கள் விவரத்தை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
குடிநீர் இணைப்பு மேளாதூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள பஞ்சாயத்து பகுதிகளை ஒருங்கிணைத்து குடிநீர் வினியோகம் செய்வதற்கு கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் குடிநீர் இணைப்பு மேளா நடத்தப்பட்டது. இதில் 13 ஆயிரத்து 847 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 10 ஆயிரத்து 426 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் குடிநீர் இணைப்பு மேளா தொடங்கப்பட்டு உள்ளது. நேற்று ராஜமன்னார் தெரு, எஸ்.எஸ்.தெரு, வி.எம்.கோவில் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கு வி.வி.டி.நீர்த்தேக்கம் அருகிலும், போல்பேட்டை மேற்கு, குறிஞ்சிநகர் பகுதி மக்களுக்கு ஸ்டேட்வங்கி காலனி வடக்கு மண்டல அலுவலகத்திலும், 35–து வார்டுக்கு உட்பட்டவர்களுக்கு சின்னமணிநகர் பூங்காவிலும் மேளா நடத்தப்பட்டது. தொடர்ந்து வருகிற 18–ந்தேதி வரை குடிநீர் இணைப்பு மேளா நடக்கிறது.
இன்றுஇன்று(வெள்ளிக்கிழமை) பூபாலராயர்புரம், குரூஸ்புரம் மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு குரூஸ்புரம் நகர்நல மையம் அருகேயும், போல்பேட்டை கிழக்கு, ஸ்டேட் வங்கி காலனி, கோமதிபாய் காலனியை சேர்ந்தவர்களுக்கு வடக்கு மண்டல அலுவலகத்திலும், நாளை(சனிக்கிழமை) முனியசாமி கோவில தெரு, ரத்னாபுரம், ஆண்டாள்தெரு, மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு வி.வி.டி.நீர்த்தேக்கம் அருகிலும், போல்ட்டை கிழக்கு, எழில்நகரை சேர்ந்தவர்களுக்கு வடக்கு மண்டல அலுவலகத்திலும், வார்டு 37–க்கு உட்பட்டவர்களுக்கு தங்கம் பள்ளிக்கூடத்திலும், 4–ந்தேதி காமாட்சியம்மன் கோவில் தெரு, சத்திரம் தெரு, கோவில் தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு அறிஞர் அண்ணா திருமண மண்டப வளாகத்திலும், சுந்தரவேல்புரம் மேற்கு, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்களுக்கு வடக்கு மண்டல அலுவலகத்திலும், வார்டு 38–க்கு உட்பட்டவர்களுக்கு கே.வி.கே.நகர் சர்ச் அருகிலும் குடிநீர் இணைப்பு மேளா நடக்கிறது.
5–ந்தேதி5–ந்தேதி நாட்டுக்கோட்டை தெரு, செயிண்ட் ஜார்ஜ் தெரு, தட்டார்தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு குரூஸ்புரம் நகர்நல மையம் அருகேயும், நந்தகோபாலபுரம் கிழக்கு, செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர்களுக்கு நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவில் அருகிலும், வார்டு 39, 40–ஐ சேர்ந்தவர்களுக்கு டூவிபுரம் மாநகராட்சி பள்ளியிலும், 6–ந்தேதி டேவிஸ்புரம் ரோடு, பிரமுத்துவிளை, வடக்கு பிள்ளையார்கோவில் தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு உச்சிமகாளியம்மன் கோவில் தெருவிலும், நந்தகோபாலபுரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர்களுக்கு நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவில் அருகிலும்,
41–வது வார்டுக்கு உட்பட்டவர்களுக்கு ராஜாஜி பூங்கா நீரேற்று நிலையம் அருகிலும், 7–ந்தேதி காளியப்பன் தெரு, வடக்கு ராஜா தெரு, சின்னக்கடை தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு சின்னக்கடைதெரு ஆர்.சி.சர்ச் அருகிலும், அழகேசபுரத்தை சேர்ந்தவர்களுக்கு அழகேசபுரம் அங்கன்வாடி மையம் அருகிலும், 42–வது வார்டுக்கு உட்பட்டவர்களுக்கு சிதம்பரநகர் சொசைட்டி பள்ளி அருகிலும், 8–ந்தேதி அந்தோணியார் கோவில் தெரு, தபால் தந்தி அலுவலகம் ரோடு, கிழக்கு சண்முகபுரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்தை ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் அருகிலும், சுந்தரராமபுரத்தை சேர்ந்தவர்களுக்கு அழகேசபுரம் அங்கன்வாடி மையத்திலும், வார்டு 43–க்கு உட்பட்டவர்களுக்கு பிரையண்ட்நகர் டி.டி.டி.ஏ. பள்ளியிலும் மேளா நடக்கிறது.
9–ந்தேதி9–ந்தேதி பத்திரகாளியம்மன் கோவில் தெரு, வடக்கு ரதவீதி, சிவன்கோவில் தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு சிவன்கோவில் தெரு மாநகராட்சி திருமண மண்டபத்திலும், அழகேசபுரம், இன்னாசியார்புரத்தை சேர்ந்தவர்களுக்கு அழகேசபுரம் அங்கன்வாடி மையம் அருகிலும், 44–வது வார்டுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கு கக்கன் பூங்காவிலும், 11–ந்தேதி சண்முகபுரம் மேற்கு, வி.இ.ரோடு, சிவந்தாகுளம் மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஜார்ஜ் ரோடு அம்மா உணவகம் அருகிலும், கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர்களுக்கு அழகேசபுரம் அங்கன்வாடி மையம் அருகிலும், 45–வது வார்டுக்கு உட்பட்டவர்களுக்கு சண்முகபுரம் மாநகராட்சி பள்ளியிலும், 12–ந்தேதி ஜார்ஜ் ரோடு, பாத்திமாநகர் மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஜார்ஜ் ரோடு அம்மா உணவகம் அருகிலும், சுந்தரவேல்புரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர்களுக்கு கிருஷ்ணராஜபுரம் வட்டக்கோவில் அருகிலும், 46–வது வார்டுக்கு உட்பட்டவர்களுக்கு சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியிலும்,
13–ந்தேதி தெற்கு காட்டன்ரோடு, மணல்தெரு, கிரகோப் தெரு மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு பனிமயமாதா ஆலய வளாகத்திலும், கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர்களுக்கு கிருஷ்ணராஜபுரம் வட்டக்கோவில் அருகிலும், 47–வது வார்டுக்கு உட்பட்டவர்களுக்கு லெவிஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளியிலும், 14–ந்தேதி ரோச் காலனி, லயன்ஸ்டவுன், பனிமயநகர் மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு லயன்ஸ்டவுன் ஆலயம், ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயம் அருகிலும், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்களுக்கு சுப்பையா மேல்நிலை நீர்த்தேக்க வளாகத்திலும், 15–ந்தேதி திரேஸ்புரம், பூபாலராயர்புரம் மற்றும் சுற்றி உள்ள பகுதியை சேர்ந்தவர்களுக்கு சந்தனமாரியம்மன் கோவில் தெரு அம்மா உணவகம் அருகிலும், திரவியபுரத்தை சேர்ந்தவர்களுக்கு சுப்பையா மேல்நிலை நீர்த்தேக்க வளாகத்திலும், 16–ந்தேதி பூபாலராயர்புரம், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்களுக்கு கருப்பட்டி கூட்டுறவு அலுவலக வளாகத்திலும், 18–ந்தேதி பொன்னகரத்தை சேர்ந்தவர்களுக்கு கருப்பட்டி கூட்டுறவு அலுவலக வளாகத்திலும் மேளா நடக்கிறது.
உடனடி இணைப்புஇந்த மேளாக்களில் குடிநீர் இணைப்பு வேண்டி பணம் செலுத்தி விண்ணப்பம் செய்பவர்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு மறுநாள் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.