தலைமை ஆசிரியரை கண்டித்து திருவாதவூர் அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அனைத்து மாணவர்களும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 1200 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று அனைத்து மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:–பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் ஒவ்வொரு மாணவரிடமும் ஆண்டுக்கு ரூ.400 முதல் ரூ.2150 வரை பணம் வசூலிப்பதாக புகார் கூறினர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம், செஞ்சிலுவை, முன்னாள் ராணுவ வீரர் நலன், கம்ப்யூட்டர் ஆசிரியர், ஆங்கில வழிக்கல்வி ஆகியவற்றின் செலவுக்கு என்று பணம் வாங்குகிறார்.
கம்ப்யூட்டருக்கு ஆசிரியரே இல்லை ஆனால் அவருக்கு பணம் கொடுப்பதாக கூறுவது பொய், மேலும் பள்ளிக்குள் தனியார் கடை நடத்த வாடகை வசூல் என்று தலைமை ஆசிரியர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். நாளுக்கு நாள் அவரின் தொந்தரவு தாங்கமுடியாததால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். தொடர்ந்து மாணவர்கள் கொட்டும் மழையிலும் கோஷமிட்டபடி போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
தகவலறிந்து வந்த மேலூர் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் கலெக்டர் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் உத்திரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து மாணவர்களை சமாதானம் செய்து வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பு மாணவ–மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தின் போது தலைமை ஆசிரியர் செல்வராஜ் விடுப்பு கடிதம் அனுப்பி விட்டு வெளியில் சென்று விட்டார்.
விரைந்து வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களை சமாதானம் செய்து வகுப்புகளுக்கு அனுப்பினார். பின்னர் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று மாணவ மாணவியரிடம் தனியாக விசராணை நடத்தினார். இந்த போராட்டம் நடைபெற்றபோதும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் விடுப்பு கடிதம் அனுப்பிவிட்டு அவர் பள்ளிகூடத்துக்கு வரவில்லை. இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துயது.