கொட்டும் மழையில் குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 8–ம் நாளான நேற்று காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதிஉலா வந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 8–ம் நாளான நேற்று காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மூஷிக வாகனத்தில் விநாயகரும் வீதிஉலா வந்தனர். அப்போது மழை பெய்ததால் மழையில் நனைந்தபடியே சாமி வீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 23–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.விழாவின் 8–ம் நாளான நேற்று காலை 11.30 மணியளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் குதிரை வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது மழை பெய்தது. மழையில் நனைந்தபடியே விநாயகரும், சந்திரசேகரும் வீதி உலா வந்தனர். தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.Related Tags :
Next Story