12 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு


12 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 1 Dec 2017 5:21 AM IST (Updated: 1 Dec 2017 5:21 AM IST)
t-max-icont-min-icon

12 மற்றும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் பிப்ரவரி 21–ந் தேதி தொடங்குகிறது.

மும்பை,

மராட்டியத்தில் மாநில கல்வி வாரியம் சார்பில் ஆண்டுதோறும் 12 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பொது தேர்வினை மும்பை, புனே, நாசிக், அமராவதி, அவுரங்காபாத், கோலாப்பூர், லாத்துர், கொங்கன் உள்ளிட்ட 9 கல்வி மண்டலங்களை சேர்ந்த மாணவர்கள் எழுதுவார்கள். கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன் தினம் நடப்பு கல்வி ஆண்டிற்கான (2017–18) பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 21–ந் தேதி தொடங்குகிறது. மார்ச் 28–ந் தேதி முடிகிறது. 12–ம் வகுப்பு தேர்வை சுமார் 14 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

10–ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்குகிறது. அன்று மொழிப்பாட தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகள் மார்ச் 22–ந் தேதி முடிகிறது. 10–ம் வகுப்பு பொது தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள். பொதுதேர்வு கால அட்டவணையை மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மராட்டிய மாநில கல்வி வாரிய இணையதள பக்கத்தில் முழு காலஅட்டவணையை பார்க்கலாம். மேலும் சந்தேகங்களுக்கு 022–27881075/77 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கேட்கலாம்.

Next Story