ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்–லோடு ஆட்டோ மோதல்; டிரைவர் உடல் நசுங்கி சாவு


ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்–லோடு ஆட்டோ மோதல்; டிரைவர் உடல் நசுங்கி சாவு
x
தினத்தந்தி 2 Dec 2017 2:30 AM IST (Updated: 1 Dec 2017 7:26 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்–லோடு ஆட்டோ மோதிக்கொண்டன. இதில் லோடு ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே பஸ்–லோடு ஆட்டோ மோதிக்கொண்டன. இதில் லோடு ஆட்டோ டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

பஸ்–ஆட்டோ மோதல்

நெல்லை மாவட்டம் உடையார்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் நாராயணன் என்ற தாஸ்(வயது 27). லோடு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலையில் தனது லோடு ஆட்டோவில் ஆழ்வார்திருநகரியில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.

ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி அருகில் சென்றபோது, எதிரே நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வந்த அரசு பஸ்சும், லோடு ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

உடல் நசுங்கி சாவு

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த நாராயணன், இடுபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விபத்தில் உயிரிழந்த நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story